புதுக்கோட்டை

"பெண் கல்வி, விடுதலைக்காக போராடியவர் பெரியார்

"பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார்' என்றார் பெரியார் சிந்தனை உயராய்வு மையை இணை இயக்குநர் க. அதிரடி அன்பழகன்.

தினமணி

"பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார்' என்றார் பெரியார் சிந்தனை உயராய்வு மையை இணை இயக்குநர் க. அதிரடி அன்பழகன்.

புதுக்கோட்டையில் பெரியார் பிறந்த நாளையொட்டி தி.க. சார்பில் நடத்தப்பட்ட பெரியார்-1000 வினாடி, வினாப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மேலும், அவர் பேசியது:

பெண்களுக்கு வரதட்சணை கொடுக்கலாமா, கொடுக்கக் கூடாதா அவர்களது உரிமை என்னவென்று கேட்டபோது, அவர்களுக்கு சொத்தில் சம பங்கு கொடுத்து விட்டால் அனைத்துக்கும் தீர்வு கிடைத்து விடும் என்றார் பெரியார். அந்த பதில் செயல்வடிவத்துக்கு வரும்போதும், சட்ட வடிவமாக்கப்பட்ட பிறகுதான், அவர் கூறியது உண்மை என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில்தான் பெண் கல்வியை, பெண் விடுதலையை முன்ணிறுத்தி வாழ்க்கை முழுவதும் போராடி வந்தவர் பெரியார் மட்டும்தான்.

அடிமைப்பட்டுக் கிடந்த பெண் இனம், கால் கட்டைவிரலை மட்டுமே பார்த்து நடந்து கொண்டிருந்த பெண்கள், இப்போது கல்வியில் முன்னேறி வருகிறார்கள். கல்வி மறுத்த ஆண் சமூகம் தற்போது படித்து பணியில் இருக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதைப் பயன்படுத்தி வரதட்சணையை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

இதையடுத்து வினாடி, வினாப்போட்டியில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி மாணவி யாமினி உள்பட முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவுக்கு, மாவட்ட தலைவர் மு. அறிவொளி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் ரெ. புட்பநாதன், ரெ.மு.தருமராசு, ஆ.சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT