புதுக்கோட்டை

"வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பல் தொழில் முனையங்களாக செயல்பட வேண்டும்'

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பல் தொழில் முனையங்களாகச் செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.வி.எஸ். குமார்.

தினமணி

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பல் தொழில் முனையங்களாகச் செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.வி.எஸ். குமார்.

நபார்டு வங்கி சார்பில் புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல் தொழில் முனையங்களாகச் செயல்படுத்துவதற்காக அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:

போட்டி நிலவும் இன்றைய சூழலில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தங்களுடைய உறுப்பினர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவது மூலமே நிலைத்து நிற்க முடியும். இத்திட்டத்தின் கீழ் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தானியக் கிடங்குகள், மண், நீர்ப் பரிசோதனை கூடங்கள், விற்பனை மையங்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல் போன்ற பல சேவைகளை உறுப்பினர்களுக்கு வழங்கலாம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் அனைத்து சேவைகளையும் ஒன்றாக்கி ஒரே இடத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும் வியாபார சந்தையில் பங்கு பெற வேண்டும் என்றார்.

திருச்சி மாவட்டம், வரதராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கச் செயலர் சரவணன், இத்திட்டத்தில் செயல்படுத்தி வரும் வாழைப்பழம் பழுக்க வைக்கும் குளிர்பதனக் கிடங்கு பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நபார்டு வங்கியின் திருச்சி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ்குமார், புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பால்வடிவு ஆகியோர் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். இதில் புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள 42 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம் வரவேற்றார். நபார்டு வங்கியின் பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் கோதண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணங்களை சரிசெய்து விரைவில் தீா்வு

தொழில்நுட்ப ஜவுளி இயக்க விழிப்புணா்வுக் கூட்டம்

வெண்ணைமலை கோயில் நில விவகாரம் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT