முகப்பு
புதுக்கோட்டை

ஆலவயலில் இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி

பொன்னமராவதி அருகே ஆலவயல் யோகம் நர்சரி பிரைமரிப் பள்ளியில் இளையோர் பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:47 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பொன்னமராவதி அருகே ஆலவயல் யோகம் நர்சரி பிரைமரிப் பள்ளியில் இளையோர் பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா, புதுப்பட்டி விவேகானந்தா மகளிர் மன்றம் இணைந்து வட்டார அளவில் நடத்திய நிகழ்விற்கு மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் க.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விடிவெள்ளி அறக்கட்டளை இயக்குனர் எஸ்.மலர்விழி வரவேற்றார். உடல்நலம், தலைமைப் பண்பு, யோகா, சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகளில் கருத்தாளர் கே.சதாசிவம், யோகம் பள்ளி முதல்வர் பி.மாதவன், ஆத்மா யோகா நிறுவனர் ஆர்.பாண்டியன், சமூக சேவகர் எஸ்.சரவணன், நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் ஆகியோர் பேசினார். மாற்றுத் திறனாளிக்கு இலவச பேருந்து அட்டை வழங்கப்பட்டது.  நேரு யுவகேந்திரா ஆர்.ஜானகி நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.