முகப்பு
புதுக்கோட்டை

மணமேல்குடி அருகே விபத்து:ஒருவர் சாவு; 4 பேர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி அருகே  செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில்  ஒருவர் இறந்தார்.  4 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி அருகே  செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில்  ஒருவர் இறந்தார்.  4 பேர் படுகாயமடைந்தனர்.
மணமேல்குடி அருகேயுள்ள பிச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் யேசுதாசும் (35),  
இவரது உறவினர் ஹரிகரனும் (20) இருசக்கர வாகனத்தில்  பிச்சனேந்தலில் இருந்து கோட்டைப்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.  அப்போது இவர்களின் வாகனமும் எதிரே காரைக்குடியிலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  யேசுதாஸ், ஹரிஹரன், காரில் வந்த காரைக்குடி சண்முகநாதன் (35), அவரது சகோதரி சுப்புலெட்சுமி (28), உறவினர் சஞ்சய் (15)  உள்ளிட்ட  5 பேர் படுகாயமடைந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இவர்களில்   தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்ட  யேசுதாஸ், ஹரிஹரன் ஆகியோரில் யேசுதாஸ் இறந்தார். கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →