அன்னவாசல் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
அன்னவாசல் அருகே அண்ணா பண்ணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்
அன்னவாசல் அருகே அண்ணா பண்ணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (மே 22) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து இலுப்பூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கா.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பண்ணை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், காலாடிப்பட்டி, கீழக்குறிச்சி, தச்சம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.