முகப்பு
புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி பிரசாரம்

மத்திய அரசுக்கு எதிராக நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கும் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மே, 2018 at 2:44 AM
பகிர்:

மத்திய அரசுக்கு எதிராக நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கும் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தேர்தலின் போது அளிக்கப்பட்ட ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, கருப்புப் பணம் கைப்பற்றி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைப்பது, விலைவாசி கட்டுப்படுத்தாதது, ரயில்வே, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்துத் துறையிலும் தனியார் மயத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் வருகிற புதன்கிழமை (மே 23) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து கந்தர்வகோட்டை பேருந்து நிலையம், காந்திசிலை முக்கம், வேலாடிப்பட்டி, கல்லாக்கோட்டை, புனல்குளம், மஞ்சப்பேட்டை, தெத்துவாசல்பட்டி, தச்சங்குறிச்சி, வடுகப்பட்டி, கோமாபுரம், மங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விளக்கி பிரசாரம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் உ.அரசப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எ.ராமையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.