வாண்டான்விடுதியில் ஜல்லிக்கட்டு: 19 பேர் காயம்
கறம்பக்குடி அருகே வாண்டான் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.
கறம்பக்குடி அருகே வாண்டான் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாண்டான் விடுதி முத்து முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம்.சரயு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதுகை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 604 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக திஅவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றதில், முட்டித் தள்ளியதில் 19 பேர் காயமடைந்தனர். பலதத காயமடைந்த இருவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் போட்டியைக் கண்டு மகிழ்ந்தனர்.
காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலீப் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.