புதுக்கோட்டை

நீர்நிலைகளை தூர் வார வேண்டும்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சி வலியுறுத்தியுள்ளது.

DIN


நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை முற்றிலும் கைவிடவேண்டும். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.  மாவட்டம் முழுவதும் உள்ள தைல மரங்கள், சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT