புதுக்கோட்டை

அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநல ஆலோசனை மையம் திறப்பு

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட மன நல ஆலோசனை மையத்தை

DIN

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட மன நல ஆலோசனை மையத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது
24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தை தற்கொலை எண்ணம் ஏற்படுவோரும், அனைத்து விதமான மனநல சிகிச்சை தேவைப்படுவோரும் 104 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.தற்கொலை எண்ணம் உருவாகும் நபர்கள் இருக்கும் இடத்துக்கே வந்தும் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் விஜயபாஸ்கர்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.மருத்துவப் பணிகள் கூடுதல் இயக்குநர் சுவாதி ரெத்னாவதி, மாநில மனநலத் திட்ட அலுவலர் பூர்ணசந்திரிகா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகரன், மாவட்ட மன நல அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆர்டிஓ, வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அடிக்கல்
முன்னதாக ரூ. 1.75 கோடியில் புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்கும், ரூ. 2.75 கோடியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கவும் பூமிபூஜை போட்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT