புதுக்கோட்டை

கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை அறிவிக்கக் கூடாது: மருத்துவத் துறை இணை இயக்குநர் அறிவுரை

பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்கேன் சென்டர்களும், மருத்துவர்களும் சட்டத்தை மதித்து

DIN


பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்கேன் சென்டர்களும், மருத்துவர்களும் சட்டத்தை மதித்து நடத்தல் அவசியம் என  மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ம. சந்திரசேகரன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தல் தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் உள்ளனர். 
இந்திய சராசரியைவிட இது  அதிகம். என்றாலும் சட்டத்தை மதித்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாக்டர்களும், ஸ்கேன் சென்டர்  நிர்வாகிகளும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கக் கூடாது.  முறையாக பதிவேடுகளை பராமரித்து வைக்க வேண்டும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால் ஸ்கேன் சென்டர்களை மூட உத்தரவிடப்படும் என்றார் ம. சந்திரசேகரன்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ.எல். மீனாட்சி சுந்தரம், சுகாதாரப்  பணிகள் துணை இயக்குநர் பரணிதரன், காசநோய் துணை இயக்குநர் மு பெரியசாமி, இந்திய மருத்துவக் கழகத்  தலைவர் டாக்டர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: மிதிவண்டி வழங்கினாா்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, நவாரோ!

டிசிஎஸ் நிகர லாபம் 14% சரிவு!

கேரளத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்! மத்திய அரசைக் கண்டித்து பினராயி விஜயன் போராட்டம்

SCROLL FOR NEXT