புதுக்கோட்டை

அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை  அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரலாம்

புதுக்கோ ட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டையிலுள்ள அரசுத் தொழில்நுட்பக் 

DIN

புதுக்கோ ட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டையிலுள்ள அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு எஸ்எஸ்எல்சி முடித்த மாணவர்கள் வரும் மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலும், கந்தர்வக்கோட்டையிலும் அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இவ்விரு கல்லூரிகளிலும் எஸ்எஸ்எல்சி முடித்த மாணவர்கள் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். அமைப்பியல் (சிவில்) இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணிப்பொறியியல், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் சேரலாம்.
மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே விடுதி வசதி உண்டு. விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், இலவச பேருந்து பயண அட்டை, சலுகைக் கட்டண ரயில் பயண அட்டை, பிசி, எம்பிசி, எஸ்ஸி, எஸ்டி மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும்.
அனைத்துத் துறைகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரமுள்ள பணிக்கூடம், ஆய்வுக் கூடங்களும் உள்ளன. வளாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.  வரும் மே 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT