புதுக்கோட்டை

செப்.14-இல் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், செப்.14- ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும்.

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், செப்.14- ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீர்வு  காணவும் மாதந்தோறும் 2- ஆவது  சனிக்கிழமைகளில் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழ் மாதத்துக்கான கூட்டம்   செப்டம்பர் 14-ஆம் தேதி  அனைத்து வட்டங்களிலும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறஉள்ளது.வட்டத்தின் பெயர், முகாம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம்:
புதுக்கோட்டை- தென்னத்திரையன்பட்டி, ஆலங்குடி- சூரன்விடுதி, திருமயம்- ஆத்தூர், குளத்தூர்- சத்தியமங்கலம், இலுப்பூர்- விசலூர், கந்தர்வகோட்டை- புதுநகர், அறந்தாங்கி- சிதம்பரவிடுதி, ஆவுடையார்கோவில்- வேதினிவயல், மணமேல்குடி- பில்லங்குடி, பொன்னமராவதி- கீழக்குறிச்சிப்பட்டி, கறம்பக்குடி- திருப்பாக்கோவில், விராலிமலை- வெம்மணி.சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT