முகப்பு
புதுக்கோட்டை

500 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கத் திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா தொற்றாளர்களை 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையில்  புதிய 108 ஆம்புலன்ஸ்களை  முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Updated On : 28 ஆகஸ்ட், 2020 at 5:43 PM
கரோனா பணியாளர்களை கெளரவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
பகிர்:

கரோனா தொற்றாளர்களை 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையில்  புதிய 108 ஆம்புலன்ஸ்களை  முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாங்கத் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 108 ஆம்புலன்ஸ்களை சென்னையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளதாகவும் மற்றவை படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

முன்னதாக கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களான புதுக்கோட்டை நகராட்சிப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கைத்தட்டி அவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.