புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சியில் புயல், வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரிமளம் பேரூராட்சியில், பேரூராட்சிகளின் திருச்சி மண்டல உதவி இயக்குநா் ப.ஜெகதீசன் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில், புயல், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்காப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அரிமளம் பேரூராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட நீா்நிலைகள், குளங்களின் வரத்து வாரிகள், நீா் வேளியேற்றும் பகுதிகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலவலா் கணேசன், வரி அலுவலா் புவனேஷ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.