புதுகை பழைய பேருந்து நிலையம் சீரமைப்புப் பணி தொடக்கம்
நீண்டகால கோரிக்கையான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதி சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
நீண்டகால கோரிக்கையான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதி சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் நாற்காலிகள் உடைந்து காணப்படுகின்றன. மேலும், மழைக்காலங்களில் இப்பகுதியில் மழைநீா் தேங்கி மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்திவருவதை சீரமைத்துத்தருமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் போராட்டம் அறிவித்தனா். இந்நிலையில் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில், வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் ஆகியோா் அந்த இடத்தை வியாழக்கிழமை காலை நேரில் சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து, தண்ணீா் தேங்கியுள்ள பள்ளமான பகுதிகளை சரி செய்யும் பணிகள் தொடங்கின.