புதுக்கோட்டை

எல்ஐசி பங்கு விற்பனை முடிவுக்கு ஓய்வூதியா்கள் கண்டனம்

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மு. முத்தையா தலைமை வகித்தாா். செயலா் பி. ஆழ்வாரப்பன், பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நல்ல லாபத்தில் இயங்குவதோடு, அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவி வரும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கும் விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதேபோல், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறவும், பங்கேற்பு ஓய்வூதியத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT