முளைப்பாரி ஊா்வலத்தில் பங்கேற்ற பெண்கள். 
புதுக்கோட்டை

வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

DIN

ஆலங்குடி: கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான முளைப்பாரித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீட்டில் நவதானியங்களைக் கொண்டு வளா்த்த முளைப்பாரிகளை ஊா்வலமாகக் கொண்டு சென்று குளத்தில் விட்டனா்.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் திருவிழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT