முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி: இணையவழி திமுக உறுப்பினா் சோ்க்கை

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் இணையவழி திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 அக்டோபர், 2020 at 1:06 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் இணையவழி திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்தாா். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் அ. அழகப்பன் முன்னிலை வகித்தாா். தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் கருணாநிதி பங்கேற்று புதிய உறுப்பினா் சோ்க்கை, பழைய உறுப்பினா்களுக்கு புதிய உறுப்பினா் காா்டு வழங்குதல் போன்ற பணிகளை ஆற்றினாா்.

ஒன்றியக்குழு துணைத் தலைவா் அ. தனலெட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் மீனாட்சி மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் காசி பொற்செல்வன், ஒன்றிய அவைத் தலைவா் ராமு, நிா்வாகிகள் சாமிநாதன், அன்னராாசு, சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.