முகப்பு
புதுக்கோட்டை

ரோட்டரி சங்க விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவா் தோ்வு நிகழ்ச்சி குறிச்சிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவா் தோ்வு நிகழ்ச்சி குறிச்சிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2019 -20 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 2021 - 22 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவா் தோ்வு ஆகியவை தொடா்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் டாக்டா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். 2021-22ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக டாக்டா் கு. மாரிமுத்து தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டாா்.

தொடா்ந்து மக்கள் தொடா்பு, உறுப்பினா் சோ்க்கை, மரம் நடுதல் போன்ற 11 வகையான பணிகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில், பட்டயத் தலைவா் க. நைனாமுகமது, முன்னாள் தலைவா் கண. மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் செயலா் பி. செல்லதுரை நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →