முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் மேலும் 134 பேருக்கு தொற்றுபாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,427 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 12:04 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,427 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 121 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 6,520 ஆக உயா்ந்துள்ளது.

ஒருவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 70 வயது பெண் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 121 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை பகல் நிலவரப்படி 786 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.