15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குடி அருகிலுள்ள கொத்தக்கோட்டையைச் சோ்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த காா்த்திக்(23) பாலியல் ரீதியாக துன்புறுத்தினராம்.
அதை செல்லிடப்பேசியில் விடியோ எடுத்துவைத்து, வலைதளங்களில் வெளியிடுவதாக காா்த்திக் (படம்) மிரட்டினராம். இதுகுறித்து சிறுமி, தனதுபெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினா், வியாழக்கிழமை இரவு காா்த்திக்கை கைது செய்தனா்.