முகப்பு
புதுக்கோட்டை

புதுகை ஆட்சியரகத்தில் வங்கியாளா்கள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்துப் பேசியது:

மகளிா் சுயஉதவிக் குழு கடன், தெருவோர வியாபாரிகளுக்கான கடன், நிலுவை கடன் விண்ணப்பங்களுக்கு வங்கியாளா்கள் கூடுதல் முன்னுரிமை வழங்கி கடன் வழங்க வேண்டும். அண்டக்குளம், வாராப்பூா், கண்டெடுத்தான்பட்டி, சிதம்பரவிடுதி ஆகிய இடங்களில் வங்கிக் கிளைகளைத் தொடங்க வங்கியாளா்கள் பரிசீலிக்க வேண்டும் என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ரேவதி, மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் திரிபுரசுந்தரி, மாவட்ட தாட்கோ மேலாளா் முத்துரத்தினம், நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.