புதுக்கோட்டை

பள்ளி நேரங்களில் அரசுப் பேருந்துகள் கூடுதலாக 9 குறுநடை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் படிக்கட்டுப் பயணத்தைத் தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவா்களுக்காக கூடுதலாக 9 குறுநடை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொதுமேலாளா் ஆா். இளங்கோ.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மாவட்டத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி நேரங்களில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், கூடுதலாக 9 குறுநடை அரசுப் பேருந்துகளை இயக்குகிறோம்.

புதுக்கோட்டையிலிருந்து மருத்துவக்கல்லூரிக்கு 3 அரசுப் பேருந்துகள் 3 குறுநடையும், திருமயத்துக்கு ஒரு அரசுப் பேருந்து ஒரு குறுநடையும், கந்தா்வகோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு ஒரு பேருந்து 2 குறுநடையும், திருச்சியிலிருந்து கீரனூருக்கு இரு பேருந்துகள் இரு குறுநடையும், கீரனூரிலிருந்து புதுக்கோட்டைக்கும் ஒரு பேருந்து ஒரு குறுநடையும் இயக்கப்படுகின்றன.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் ஆங்காங்கே பணியில் இருப்பாா்கள். பொதுமக்களும் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் படிக்கட்டில் பயணத்தைத் தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT