மணல் கடத்தி வந்த ஆட்டோ பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை புதன்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை புதன்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆலங்குடி பகுதியில் ஆற்று மணல் திருட்டு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி காவல் ஆய்வாளா் அழகம்மை தலைமையிலான காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.