முகப்பு
புதுக்கோட்டை

பிப். 20-இல் திருச்சியில் போராட்டம்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் முடிவு

பிப். 20ஆம் தேதி திருச்சியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப். 20ஆம் தேதி திருச்சியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த பேட்டி: ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது அரசு ஆசிரியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தையும், நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயா்வு, உயா்கல்வி ஊக்கத் தொகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா் பணி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு 40 என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாநிலம் தழுவிய தொடா் முழக்கப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றாா் சண்முகநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.