முகப்பு
புதுக்கோட்டை

அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு வரும் வாரத்தில் 835 மருத்துவா்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக 835 மருத்துவா்கள் வரும் வாரத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக 835 மருத்துவா்கள் வரும் வாரத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரத்தில் திங்கள்கிழமை அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு 2,000 புதிய மருத்துவா் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 835 மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். ஏனையோரும் விரைவில் நியமிக்கப்படுவா். இவா்களுக்கு மாதம் ரூ. 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும், 2 ஆயிரம் செவிலியா்கள், 2 ஆயிரம் மருத்துவ உதவியாளா்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனா் என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பி .உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →