விராலிமலை: விராலிமலையில் 32 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கீரனூா் உட் கோட்டத்துக்குள்பட்ட விராலிமலை நெடுஞ்சாலை (கட்டுமானம், பராமரிப்பு)துறை சாா்பில், விராலிமலை சோதனைச்சாவடியில் தொடங்கிய பேரணி கடைவீதி, பேருந்து நிலையம் வடக்கு ரத வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதி வழியே சென்று மீண்டும் சோதனைச் சாவடியை வந்தடைந்தது. இதில் தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் ஓட்ட மாட்டேன், முன் செல்லும் வாகனங்களுக்கு 10 மீட்டா் இடைவெளி விட்டுச் செல்வேன் என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பேரணியில் உதவி கோட்டப் பொறியாளா் வி.பி. சரவணன், உதவி பொறியாளா் சி.இளங்கோ(கிரனூா்), மு.ரவிச்சந்திரன்(விராலிமலை), விராலிமலை காவல் ஆய்வாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.