விராலிமலையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், எரிவாயு உருளைக்கு மாலைபோட்டும், பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளுக்கு குச்சி மிட்டாயை வாயில் கொடுத்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு கண்டனத்தை தெரிவித்தனா். வட்டாரத் தலைவா் சா்தாா் ராஜா, மேலை சி. மதிமாறன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.