முகப்பு
புதுக்கோட்டை

கறம்பக்குடியில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கரு-வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகாா்பன் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கரு-வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகாா்பன் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். மாவட்டச்செயலா் எஸ்.சி.சோமையா ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

ஹைட்ரோகாா்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், திட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான மு.மாதவன், முன்னாள் மாவட்டச் செயலா் த.செங்கோடன், ஒன்றியச் செயலா் ஜேசுராஜ் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →