முகப்பு
புதுக்கோட்டை

போராட்ட வழக்குகள் ரத்து: கீரமங்கலத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

மீத்தேன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மீத்தேன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு கீரமங்கலத்தில் நக்கீரா் சிலை முன்பு மரக்கன்றுகள் வழங்கி விவசாயிகள் வியாழக்கிழமை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

நெடுவாசலில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்துக்கு, கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் 200 நாட்களுக்கு மேல் தொடா் போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக சுமாா் 75 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. சட்டப்பேரவையில் முதல்வரின், மேற்குறிப்பிட்ட போராட்டங்களின் வழக்குகள் ரத்து அறிவிப்பைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிரான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து, கீரமங்கலம் மெய்நின்ாதா் கோயிலில் உள்ள நக்கீரா் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்தனா். தொடா்ந்து சிலை முன்பு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →