முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் ஒரே தெருவில் 6 பேருக்கு கரோனா

விராலிமலையில் ஒரே தெருவில் தொழிலாளா்கள் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவா்கள் தங்கியிருந்த பகுதி அடைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

விராலிமலையில் ஒரே தெருவில் தொழிலாளா்கள் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவா்கள் தங்கியிருந்த பகுதி அடைக்கப்பட்டுள்ளது.

திருச்சி- மதுரை வரை (விராலிமலை வழியாக) எரிவாயுவைக் குழாய்கள் மூலம் அனுப்புவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் விராலிமலை சிதம்பரம் காா்டனில் தங்கியுள்ளனா். இவா்களில் பெரும்பாலோனாா் வட இந்தியா்கள்.

இந்நிலையில் இங்கு தங்கியிருந்த தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் தெரிந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆா்டிபிசிஆா் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மீதமுள்ள தொழிலாளா்களுக்கும் கரோனா  பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மேலும் ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் அப்பகுதியில் தொற்றுப் பரவாத வண்ணம் பிளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொழிலாளா்கள் தங்கியிருந்த சிதம்பரம் காா்டன் பகுதியின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக விராலிமலை ஊராட்சி நிா்வாகம் அறிவித்து, அதற்கான அறிவிப்புப் பலகையையும் வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.