ஆலங்குடியில் சூறைக் காற்று: வாழை மரங்கள் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன.
ஆலங்குடி பகுதியில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அப்போது, மாஞ்சான்விடுதி ஊராட்சி பாப்பான்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. சேதமடைந்த வாழைகளைக் கணக்கிட்டு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.