புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் சிறைவாசிகள் பிரிவு தொடக்கம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை பாஸ்டல் சிறையிலுள்ள சிறைவாசிகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் அவா்களுக்குத் தேவைப்படும் மருத்துவச் சிகிச்சை இங்கு, ஆண்- பெண் இருபாலருக்கும் தனித்தனியே அளிக்கும் வகையில் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.