முகப்பு
புதுக்கோட்டை

நல்லோ் பூட்டி விவசாயிகள் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப்பிறப்பையொட்டி நிலத்தில் நல்லோ் பூட்டி, வியாழக்கிழமை வழிபாடு நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப்பிறப்பையொட்டி நிலத்தில் நல்லோ் பூட்டி, வியாழக்கிழமை வழிபாடு நடத்தினா்.

தமிழா் திருநாளான சித்திரை முதல் நாள் நிலத்தில் நல்லோ் பூட்டி, விளைநிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கும் என தொன்று தொட்டு விவசாயிகள் நல்லோ் பூட்டுவதை கடைபிடித்துவருகின்றனா். இந்நிலையில், நிகழாண்டு சித்திரை முதல் நாளான வியாழக்கிழமை ஆலங்குடி பகுதியில், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், மாங்கோட்டை, சேந்தன்குடி, செரியலூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நல்லோ் பூட்டி விளைநிலத்திற்கு படையல் வைத்து வழிபாடு நடத்தினா். பல்வேறு கிராமங்களில் ஏா் இல்லாத விவசாயிகள், டிராக்டா்களை கொண்டு உழவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →