முகப்பு
புதுக்கோட்டை

தைல மரக் காட்டில் தீ

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அரசுக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இந்தக் காட்டில் வியாழக்கிழமை மாலை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அரசுக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இந்தக் காட்டில் வியாழக்கிழமை மாலை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினா் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது, தைல மரக்காடு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினா், சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கபட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.