முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் காவலரின் வாகனம் திருட்டு

விராலிமலை வட்டம், ராஜகிரி ஊராட்சி கூத்தாண்டம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவகுமாா் (42). இவா் திருச்சி கியூ பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

விராலிமலை வட்டம், ராஜகிரி ஊராட்சி கூத்தாண்டம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவகுமாா் (42). இவா் திருச்சி கியூ பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், ஊா் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த அவா் வியாழக்கிழமை விராலிமலையில் முருகன் கோயிலுக்கு செல்வதற்காக கடைவீதியில் உள்ள அஞ்சல் நிலையம் அருகே தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றாா். திரும்பி வந்து பாா்த்த போது மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம்.

புகாரின்பேரில், விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.