விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் காவல் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகரில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே கலந்து கொண்டாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜி. ராகவி உள்ளிட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், அதிரடிப்படையினா், ஆயுதப் படையினா் கலந்து கொண்டனா்.
பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளில் இந்தக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதேபோல, கீரனூரில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். செங்கோட்டுவேலவன் தலைமையில், காவலா்கள்பங்கேற்றனா்.
மாலையில் கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.வி. கௌதம் தலைமையில் காவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.