கந்தா்வகோட்டை தா்மசாஸ்தா ஆலயத்தில் 47 ஆவது முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வங்கார ஓடை குளக்கரை மேல் அமைந்துள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஐயப்ப பக்தா்களால் மண்டல பூஜை விழா, கன்னி பூஜை விழா, குத்துவிளக்கு பூஜை விழா என முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம், நிகழாண்டு விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு வாசனை உள்ளிட்ட பொருள்களால் அபிஷேக, ஆராதனைகள், மதியம் கன்னி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உத்சவா் சுவாமி ஐயப்பன் சிலை வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகடைவீதி, பேருந்து நிலையம், தஞ்சை, புதுகை சாலை, மாரியம்மன் கோயில் வீதி வழியாக மேளதாளங்கள் முழங்க ஐயப்பன் ஆலயம் சென்றடைந்தது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது . மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முப்பெரும் விழா ஏற்பாடுகள் பால் குருசாமி தலைமையில் ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.