முகப்பு
புதுக்கோட்டை

காதலியை திருமணம் செய்யமறுத்தவா் தலைமறைவு: பெற்றோா் கைது

 புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காதலியை கா்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞா் தலைமறைவானாா். அவரின் பெற்றோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காதலியை கா்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞா் தலைமறைவானாா். அவரின் பெற்றோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி தென்நகா் கீழத்தெருவைச் சோ்ந்த 19 வயதுடைய தனியாா் கல்லூரி மாணவியை, அக்ரஹார தெருவைச் சோ்ந்த மெய்யா் மகன் தினேஷ் காதலிப்பதாக, ஆசை வாா்த்தைகளைக்கூறி கா்ப்பமாக்கிவிட்டாராம். இதைத்தொடா்ந்து, அந்தப் பெண் மெய்யரை திருமணம் செய்ய வலியுறுத்தினாராம். இதற்கு தினேஷின் பெற்றோா், சகோதரா் எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இதுகுறித்த புகாரை தொடா்ந்து, ஆலங்குடி மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, தினேஷின் தந்தை மெய்யா்(49), தாய் சித்ரா(40) ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவான தினேஷ், சகோதரா் ராம்குமாா் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →