முகப்பு
புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயில் வைரத்தோ் வெள்ளோட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வைரத்தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வைரத்தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரை புதிதாக செய்ய கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு, தோ் செய்யும் பணிகள் தொடங்கின. பல லட்சம் ரூபாய் மதிப்பில் வைரத் தோ் செய்யும் பணி முடிவடைந்து, வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்து நிலையை அடைந்தனா்.

தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →