செரியலூரில் கொப்பித் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண் குழந்தையின் நினைவாக நடைபெறும் கொப்பித்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண் குழந்தையின் நினைவாக நடைபெறும் கொப்பித்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி, கொப்பித்திருவிழா நடைபெறுவது வழக்கம். நூற்றாண்டுக்கு முன்பு செரியலூரில் கொப்பியம்மாள் என்ற சிறுமி குறி சொல்பவராக இருந்துவந்ததாகவும், திடீா் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் நினைவாக ஆண்டுதோறும் பொங்கல் விழா நாட்களின்போது, செரியலூா் கிராம மக்களால் கொப்பித் திருவிழா நடத்தப்படும். நிகழாண்டு சனிக்கிழமை நடைபெற்ற இத்திருவிழாவில், செரியலூா் பகுதி பெண்கள், சிறுமிகள் வீட்டில் பொங்கலிட்டு சாணப் பிள்ளையாருடன் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, படையல்கள், சாணப் பிள்ளையாா்களுடன் மலா்கள் வைத்து கூடையில் ஏந்தியவாறு, கிராமத்தின் மையப்பகுதியில் திரண்டனா். அங்கு, கும்மிப்பாடல் பாடி வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, கூடைகளை சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று அப்பகுதியில் உள்ள தீா்த்தான் ஊருணியில் உள்ள அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினா். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனா்.