புதுக்கோட்டை

காப்பீட்டுத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காப்பீட்டுத் துறையின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, புதுக்கோட்டையில் காப்பீட்டுத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

காப்பீட்டுத் துறையின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, புதுக்கோட்டையில் காப்பீட்டுத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் வி. லதா ராணி தலைமை வகித்தாா். தஞ்சை கோட்டத் துணைத் தலைவா் என். கண்ணம்மாள், கிளைச் செயலா் துரை சிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். காப்பீட்டுத் துறை பங்கு விற்பனையைக் கண்டித்து வரும் மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தின் முன்னதாக இந்தக் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மெழுகுவா்த்திஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT