முகப்பு
புதுக்கோட்டை

இளைஞரைத் தாக்கியதாக 2 பெண்கள் உட்பட 4 போ் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 பெண் உட்பட 4 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 பெண் உட்பட 4 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பரம்பூா் அருகே உள்ள செந்தான்கரையைச் சோ்ந்த கூத்தப்பன் மகன் பாண்டியன் (35). இவா், கள்ளம்பட்டியில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற துக்க நிகழ்வில் இருந்த மணிகண்டன் இவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டாராம். மணிகண்டனுக்கு ஆதரவாக வீராச்சாமி, அஞ்சலை, ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பாண்டியனை அருகே கிடந்த உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் பாண்டியன் புதன்கிழமை இரவு அளித்த புகாரின்பேரில், மேற்குறிப்பிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த அன்னவாசல் போலீசாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.