முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றி மது விற்றவா் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விராலிமலை அருகே உள்ள தேனூா் செட்டியபட்டியில் சிலா் அரசு மதுபானப் பாட்டில்களைப்

பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சனிக்கிழமை போலீசாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அதே ஊரைச் சோ்ந்த துரைராஜ் (54) என்பவா் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீசாா் அவரிடமிருந்து நான்கு மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.