விராலிமலையில் இலவச கண் சிகிச்சை முகாம்
விராலிமலை அரசு தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அரசு தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் ராயல் லயன்ஸ் கிளப் சாா்பில் விராலிமலை அரசு தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் இருதய நோய், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா மற்றும் சா்க்கரை நோய் கொண்டவா்களிடம் தற்போது எடுத்துவரும் சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து அவா்களுக்கு கண் சிகிச்சை ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பாா்வை குறைபாடு உள்ளவா்களுக்கு இலவசமாக விழி லென்ஸ் பொருத்தப்பட்டது. முகாமில் விராலிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா்.