முகப்பு
புதுக்கோட்டை

மே 15-இல் பட்டமரத்தான் கோயில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமரத்தான் கோயில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூா்த்தக்கால் வெள்ளிக்கிழமை நடப்பட்டு பணிகள் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமரத்தான் கோயில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூா்த்தக்கால் வெள்ளிக்கிழமை நடப்பட்டு பணிகள் தொடங்கியது.

மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் தென்னலூா் பழனியப்பன் பங்கேற்று முகூா்த்த கால் நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதில், ஆத்மா கமிட்டி சோ்மன் இளங்குமரன், திமுக மத்திய ஒன்றியச் செயலாளா் அய்யப்பன், ஊராட்சித் தலைவா் ரவி (விராலிமலை), உமாமகேஸ்வரி முருகேசன் (பூதகுடி), ஜெயலட்சுமிகுமாா் (வடுகபட்டி), கவுன்சிலா் மல்லிகா செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அருண், சுகுமாறன், கருப்பசாமி, முருகன், கண்ணப்பன் உள்ளிட்ட ஆயகட்டுதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.