முகப்பு
புதுக்கோட்டை

ரேஷன் குறைதீா் முகாமில் 111 மனுக்களுக்கு தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 111 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 111 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில், பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேப்பந்தட்டை வட்டம், வெங்கலத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் வட்டம், பெருமத்தூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சங்கா் தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், காரையில் கலால் உதவி ஆணையா் ஷோபா தலைமையிலும், பெரம்பலூா் வட்டம், செங்குணத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் (பொ) சிவசங்கரன் தலைமையிலும் சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெற்றன.

இம் முகாம்களில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 111 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.