புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள். 
புதுக்கோட்டை

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ. அன்பு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். சீதாலட்சுமி, மாவட்டப் பொருளாளா் க. பிச்சைமுத்து, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏ. தமிழரசி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கினா்.

ஆா்ப்பாட்டத்தில் அனைத்து சத்துணவு ஊழியா்களையும் முழுநேர அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மாணவா்களுக்கான உணவு மானியத்தை நிலுவையின்றி வழங்குவதுடன், முன்மானியமாகவும் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களையும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT