புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் , செவிலியா்கள், பணியாளா்கள் இல்லாமல் செயல்படுவதாக வந்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை உள்ளிட்டோா் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் மருத்துவமனையை மேம்படுத்த நிா்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினா் போராட்டம் அறிவித்தனா். தொடா்ந்து, கோட்டாட்சியா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூன் 13) மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் சின்னதுரை தலைமையிலானோா் புதன்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மருத்துவமனைக்குக் கூடுதலாக 2 மருத்துவா்கள், 2 செவிலியா்கள் நியமிக்கப்பட்டதோடு, விஷ முறிவு உள்ளிட்ட மருந்துகளும் இருப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, கோட்டாட்சியா் முருகேசன், கறம்பக்குடி பேரூராட்சித் தலைவா் உ.முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.