புதுக்கோட்டை

மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் பெற அழைப்பு

விராலிமலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் பெறலாம்.

DIN

விராலிமலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் பெறலாம்.

இத்திட்டத்தில் பண்ணைக் கருவிகள் மண்வெட்டி 1, கடப்பாரை 1, களைக்கொத்து-1 ,இரும்புச்சட்டி-1 கதிா் அரிவாள்- 2 கொண்ட தொகுப்பு ,பேட்டரி மருந்து தெளிப்பான், திரவ உயிரியல் உரங்கள் ஆகிய இடுபொருள்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இவை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்து விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், இதர பஞ்சாயத்து விவசாயிகளுக்கு ஒதுக்கீடு,முன்னுரிமை அடிப்படையிலும் விநியோகிக்கப்படுகிறது.

பண்ணைக் கருவிகள், திரவ உயிா் உரங்கள் 50 சதவீத மானிய விலையிலும், பேட்டரி மருந்து தெளிப்பான்-ரூ. 2 ஆயிரத்திற்கு மானிய விலையிலும் விநியோகிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வேளாண் இடுபொருள்களை மானியத்தில் பெற்றிட உழவன் செயலியில் விவசாயிகள் முன்பதிவு செய்தும், உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு பரிந்துரை பெற்றும் பெறலாம் என விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ப. மணிகண்டன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT